லயன் எயார் விமானத்தில் பயணித்த 17 பேரின் ஆடைகள் இனங்காணப்பட்டுள்ளது

லயன் எயார் நிறுவனத்தின் விபத்துக்குள்ளான அன்ரனோவ் 24ரக விமானத்தில் பயணித்து உயிரிழந்தவர்களின் மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் ஆடைகளைக் கொண்டு 17 பேரை அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லயன் எயார் நிறுவனத்தின் விபத்துக்குள்ளான அன்ரனோவ் 24ரக விமானத்தில் பயணித்து உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் நோக்கில் அவ் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் இன்று இரண்டாம் நாளாக யாழ் சுப்பிரமணியம் சிறுவர் பூங்காவிற்கு முன்பாக மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நேற்று காலை 10 மணி தொடக்கம் மக்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு இன்று பி.ப 4 மணியுடன் நிறைவடைகிறது.

இக் காட்சிப்படுத்தலின் மூலம் பாலசுந்தரம் மனோரஞ்சிதம் (வயது - 42), பாலசுந்தரம் செந்தில்வேல் (வயது - 24), இளயவி ரகுநாதன் (வயது - 24), ஐயாகுட்டி கிருபாகரன் (வயது - 36), ஐயாகுட்டி பகீரதன் (வயது - 23) , வ.சரஸ்வதி ஆகிய 6 பேர்  அவர்களின் உடமைகளைக் கொண்டு உறவினர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.

இதுவரை விமானத்தில் பயணித்தவர்களில் 21 உடமைகளைக் கொண்டு 11 பேரை அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Latest Offers