கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன், இந்தியாவிற்கு விஜயம்

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

கடந்த சில நாட்களாக இலங்கையில் தங்கியிருந்த ராதிகா, இன்று காலை இந்தியா நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ராதிகா கடந்த டிசம்பர் மாதம் 28ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

இலங்கை விஜயத்தின் போது ராதிகா வீட்டுக் காவலில் தடுத்து வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அந்த தகவலை இலங்கை அரசாங்கம் மறுத்திருந்தது.

எனினும் இலங்கை அதிகாரிகள் தம்மை கடுமையாக எச்சரித்தனர் என ராதிகா சிற்சபேசன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடிய எம்.பி ராதிகா சிற்சபேசன் இலங்கையில் இருந்து புறப்பட்டார்

கனடியப் பாராளுமன்ற இலங்கைத் தமிழ்ப் பெண் உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் இலங்கைக்கான தனது சுற்றுலாப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சனிக்கிழமை அதிகாலை இலங்கையை விட்டு புறப்பட்டார்.

 அப்பொழுது வழியனுப்பி வைத்த அவரின குடும்ப நண்பரும் ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்க்கரா கொழும்பு விமான நிலையத்தில் கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகாவுடன் காணப்படுகின்றார்.

Latest Offers