சர்வதேச விசாரணைக்கு யாழில் தமிழ் சிவில் சமூகமும் நிஷாவிடம் வலியுறுத்து!

யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளரிடம் தமிழ் சிவில் சமுகம் சர்வதேச விசாரணை நடத்தப்படும் வகையிலான தீர்மானம் ஐநா மனிதவுரிமைகள் கூட்டத்தொடரில் கொண்டுவரப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இன்றைய தினம் யாழ்.கிறீன் கிறாஸ் விடுதியில் சந்தித்த நிசா பிஸ்வால் சுமார் 1 மணிநேரம் பேச்சுவார்த்தையினை நடத்தியுள்ளார்.

இதன்போதே தமிழ் சிவில் சமுகம் மேற்படி கோரிக்கையினை விடுத்திருப்பதாக பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

விடயம் தொடர்பாக மேலும் அவர்கள் குறிப்பிடுகையில்,

சிறீலங்கா அரசாங்கம் தமிழ் தேசத்தின் மீது திட்டமிட்ட இன அழிப்பினை நடத்தியிருந்தது. நடத்திக் கொண்டிருக்கின்றது.

மேலும் 2009ம் ஆண்டு போர் காலப்பகுதியில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள், மற்றும் வெடி பொருட்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களால் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களையும், போர்க்குற்றங்ளையும் அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது.

எனவே இவை விசாரிக்கப்பட வேண்டும் என்ற வகையிலான தீர்;மானத்தை ஜ. நா மனிதவுரிமைகள் கூட்டத்தொடரில் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவில் சமுகம் வலியுறுத்தியுள்ளதுடன், அவ்வாறான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவராவிட்டால், சிறிலங்கா அரசாங்கம் தற்போதுள்ள மிக மோசமான நிலைக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்துவிடும் என்பதனையும் நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றோம் என மேலும் தெரிவித்தனர்.

Latest Offers