இலங்கைத் தமிழர்களின் நிலையைக் கண்டு கவலைப்படுகிறோம்: பிரான்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்

இலங்கையிலுள்ள தமிழ் பேசும் தமிழ் மக்கள் படும் கஸ்டங்களை கண்டு நாங்கள் தொடர்ந்து கவலைப்படுகிறோம் என பிரான்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பணியாளர் பிரேட்ரிக் பெப்பனி தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் லங்காசிறி கலையகத்தில் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அவர்,

இலங்கையின் உள்நாட்டுப் போர் தொடக்கம் தற்போது வரை தமிழர்களின் நிலையினைக் கண்டு கவலைப்படுகிறோம்.

இந்தப் பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வை எதிர்நோக்கி உழைக்க எங்களது தெண்டு நிறுவனம் மிகவும் ஆவலாக உள்ளது.

பிரான்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் 2009ம் ஆண்டிலிருந்து தற்போது வரை 20 நாடுகளில் வெற்றி கரமாக பணியாற்றி வருகின்றது என்றார்.

Latest Offers