வட்டுக்கோட்டையில் நபரொருவர் கைது: தலைமறைவான கோபியின் சகா என இராணுவம் அறிவிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள ஒருங்கிணைத்து கட்டியெழுப்பும் நோக்கில் வடக்கில் தலைமறைவாகியுள்ள கோபி என்பவரின் பிரதான சகா கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள ஒருங்கிணைத்து கட்டியெழுப்பும் நோக்கில் வடக்கில் தலைமறைவாகியுள்ள கோபி என்பவரின் பிரதான சகா கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணிக்கம் குவான் என்ற இந்த நபர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வைத்து விசேட இராணுவ குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் குண்டுகளை கண்டறிய பயன்படுத்தப்படும் உபகரணம் மற்றும் ரி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ஆயிரத்து 500 தோட்டக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவா மனித உரிமை பேரவையின் பிரேரணை, மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பான பிரசாரங்களை அரசாங்கம் முன்னெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த திட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்படும் நபர்கள் வெளியிட்ட தகவல்கள் என்று கூறி மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் மீட்கப்பட உள்ளதாகவும் அரச புலனாய்வுப் பிரிவின் உட்தரப்பு வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்திருந்தன.

Latest Offers