ஐ.ம.சுதந்திர முன்னணியிலிருந்து கமலேந்திரன் நீக்கம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரனை இடைநிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்தவினால் தனக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக இன்று யாழ்.ஊடக அமையத்தில இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த 6 ம் திகதி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவினால், கமலேந்திரனை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து இடைநிறுத்துவதாக அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கமலேந்திரனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது தொடர்பாக தேர்தல் திணைக்களத்துடன், கலந்துரையாடி முடிவு எடுக்கப்படுமென அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாக டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

நெடுந்தீவுப் பிரதேச சபைத் தவிசாளர் டானியல் றெக்ஷசன் கொலைக் குற்றச்சாட்டில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட கமலேந்திரன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers