காலி - மாத்தறை அதிவேகப்பாதை ஜனாதிபதியினால் திறப்பு!

தென் அதிவேக பாதையின் காலி முதல் மாத்தறை வரையான பாதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் இன்று சனிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

காலி பின்னதுவ முதல் மாத்தறை கொடகம வரையான பாதையே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது.

சர்வமத வழிபாடுகளின் பின்னர், இந்த பாதை திறந்து வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த மார்க்கத்திலான மீளாய்வு செய்யப்பட்ட பஸ் கட்டணங்கள் இன்றிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

கடுவெல மற்றும் கொட்டாவையில் இருந்து மாத்தறை வரையான பயணத்திற்கு 500 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது.

Latest Offers