பெல்ஜியத்தில் எழுச்சியுடன் இடம்பெற்ற தமிழின அழிப்பு நாள் நிகழ்வுகள்

பெல்ஜியம் நாட்டில் தமிழின அழிப்பு நாள் மிக எழுச்சிப்பூர்வமாக நடைபெற்றது.

மாவீரர் கல்லறை வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும், எமது தேசத்துக்காக தமது உயிரை அர்ப்பணித்த மாவீரர்களுக்காகவும் வணக்கம் செலுத்தப்பட்டது.

அத்துடன், தமிழின அழிப்புக்கான நீதி கோரும் பேரணி Antwerpen தலைமை தொடரூந்து நிலையத்தை நோக்கி நகர்ந்தது.

மக்கள் நடமாடும் நகர மத்தியால் பேரணி செல்லும் நேரத்தில் வேற்றின மக்கள் மிக அவதானமாக ஈழத்தமிழர்களின் இன அழிப்பை எடுத்துரைக்கும் பதாகைகளை நோக்கியதோடு அவர்களுக்காக வழங்கிய துண்டுப் பிரசுரத்தையும் பெற்றுக்கொண்டனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு எழுச்சிப்பூர்வமாக தமிழினவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட உறவுகளுக்காக உணர்வுபூர்வமாக தமது நீதியை கோரி நின்று போராடினர்.

தமிழர் பண்பாட்டுக் கழகம் - பெல்ஜியம்

Latest Offers