கமலேந்திரன் உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் றெக்சியன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரது விளக்கமறியலை தொடர்ந்தும் நீடித்து ஊர்காவற்றுறை நீதிமன்று நேற்று உத்தரவிட்டது.

இக்கொலை வழக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இவர்களது விளக்கமறியல் காலத்தை நீடித்து நீதிவான் எஸ்.லெனின்குமார்  உத்தரவிட்டார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி நெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவராக இருந்த றெக்சியன் புங்குடுதீவில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இக் கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார், அப்போது ஈ.பி.டி.பி. யாழ்.மாவட்ட அமைப்பாளரும், வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த கந்தசாமி கமலேந்திரன், உயிரிழந்த றெக்சியன் மனைவி உள்ளிட்ட மூன்று பேரைக் கைது செய்து ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கு பதிவு செய்து தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers