கிளிநொச்சியில் விவசாய பீடத்தை திறந்து வைத்தார் உயர்கல்வி அமைச்சர்

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க இன்று திறந்து வைத்தார்.

இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்,வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி உட்பட பலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்கு மிகவும் நீண்ட காலமாக கிளிநொச்சியில் காணி ஒதுக்கப்பட்ட நிலையிலும் தற்போதுதான் நிர்மாணிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Latest Offers