கொழும்பில் நடத்திய கூட்டத்தை கலைத்த பிக்குகள்

கொழும்பு மருதானையில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்காக இன்று நடத்திய கூட்டம் ஒன்றில், கலந்து கொண்ட காணாமல் போனவர்களின் குடும்பங்களை வன்முறை கும்பல் அச்சுறுத்தியுள்ளது.

மருதானை டீன் வீதியில் உள்ள இடம்மொன்றில் அரசசார்பற்ற நிறுவனம் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததுடன், அதில் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில ராஜதந்திரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மணிநேரத்தில் பிக்குமார் தலைமையிலான 20 பேர் கொண்ட கும்பல், கூட்டம் நடக்கும் இடத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துடன், கூட்டத்திற்கு இடையூறு விளைவித்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வன்முறை கும்பல் கூட்டத்தின் அமைப்பாளர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினரை கடும் சொற்களால் திட்டியுள்ளனர்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்த போதிலும் குழப்பதை ஏற்படுத்திய கும்பலை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது போயுள்ளதாக கூறப்படுகிறது.

Latest Offers