காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு இன்று முதல் முல்லைத்தீவில்!

காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று முல்லைத்தீவில் தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இன்று தொடக்கம் வரும் ஐந்தாம் திகதி வரை முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெறவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் தோறும் இந்த விசாரணை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சுமார் 20 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

அவற்றில் பத்தாயிரம் முறைப்பாடுகள் தொடர்பான சாட்சியங்கள் சேகரிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Latest Offers