முல்லைத்தீவில் வீட்டுக்குள் புகுந்த விசித்திர உயிரினம்

முல்லைத்தீவு வண்ணாங்குளம் பகுதியில் நேற்றிரவு ஒருவரின் வீட்டுக்குள் வித்தியாசமான உயிரினம் ஒன்று புகுந்துள்ளது.

அதனை இனம் கண்டுகொள்ளாத வீட்டுக்காரர் அயலவர்களுடன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த பொலிஸார் அது அணுங்கு (Pangolin) என்ற உயிரினம் என கண்டுகொண்டனர்.

சுமார் 3 அடி நீளமான இந்த அணுங்கை மீண்டும் காட்டில் பொலிஸார் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

Latest Offers