வடமாகாண சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்

வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினரான வீ. கனகசுந்தரசுவாமி அண்மையில் காலமானதை அடுத்து அவரது வெற்றிடத்துக்கு கந்தையா சிவநேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல்கள் செயலகம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இந்த உறுப்பினருக்கு அடுத்தபடியாக அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்ட நபர் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

சிவநேசன் புளொட் அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers