வட மாகாண சபையின் வெற்றிடத்துக்கு இரண்டு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

வட மாகாண சபையில் வெற்றிடமாக காணப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் இடத்திற்க்கு தேர்தல் ஆனையாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அடுத்த இடங்களில் இருந்த இரண்டு புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வட மாகாண சபையின் யாழ் மாவட்ட பிரதிநிதியான தர்மலிங்கம் சித்தார்த்தனின் இடத்திற்கு கணபதிப்பிள்ளை தர்மலிங்கமும்,

வன்னி மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில வெற்றி பெற்ற சிவமோகனின் இடத்திற்கு வல்லிபுரம் கமலேஸ்வரனும் நிமிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் இருவரும் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் யாழ்ப்பாணம், மாட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா முன்னிலையில சத்தியப் பிரமாணம் செய்து தமது பதவிகளை ஏற்றுக் கொண்டார்கள்.

இந் நிகழ்வில் சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் தலைவர் எஸ். வியாகேஸ், வலி. பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சோ.சுகிர்தன், வலி மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் த.நடனேந்திரன் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் நிர்வாக செயலாளர் பெ.கனகசபாபதி, பொருளாளர் எக்ஸ்.குலநாயகம் மற்றும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டார்கள்.

Latest Offers