உரிய ஆவணத்தை சமர்ப்பிக்க தவறிய இலங்கை தமிழர் அமெரிக்காவில் கைது

உரிய பயண ஆவணங்களை சமர்ப்பிக்க தவறிய இலங்கைத் தமிழர் ஒருவரை அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

இந்த இலங்கைத் தமிழர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பாம்பீச் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

26 வயதான இந்த இலங்கை தமிழ்ர் பயணித்த வாகனத்தின் கண்ணாடி கடுமையான கறுப்பு வர்ணப்படுத்தப்பட்டு பயணித்த போதே சந்தேகம் கொண்ட பொலிஸார் அதனை மறித்து சோதனையிட்டுள்ளனர்.

இதன்போதே இலங்கையர் உரிய ஆவணங்கள் இன்றி இருந்தமை தெரியவந்தது.

ஐங்கரதாஸ் இராஜலிங்கம் என்ற 26 வயதான கைது செய்பய்பட்ட குறித்த இலங்கைத் தமிழர் ஏற்கனவே இந்தப் பெண் ஹூஸ்டன் பொலிஸாராலும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.