யாழ். மாநகரசபை மேயராக திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவு

யாழ்ப்பாண  மாநகர சபையின் மேயராக திருமதி யோகேஸ்வரி பற்குணராசா நியமிக்கப்பட்டுள்ளார். இதேநேரம் உதவி மேயராக  துரைராஜா இளங்கோ எனப்படும் றீகன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால்  நியமிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த யாழ்ப்பாண மாநகரசபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்ட ஈ.பி.டி.பி. கட்சியின் வேட்பாளர்களாகிய இருவரும் வெற்றியடைந்திருந்தனர்.
 
மேயராக தெரிவாகியுள்ள கல்விமானாகிய யோகேஸ்வரி பற்குணராஜா சுமார் 28 வருட காலமாக கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு மாவட்டங்களிலுள்ள பல்வேறு கல்லூரிகளில் ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியதுடன் அமைச்சுக்களில் உயரிய பதவிகளையும் வகித்துள்ளார்.
 
இதேவேளை உதவி மேயராக தெரிவு செய்யப்பட்ட யாழ்ப்பாண  மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான துரைராஜா இளங்கோ எனப்படும் றீகன் சிறந்த சமூக சேவையாளர் என ஈ.பிடி.பி.கட்சி தெரிவித்துள்ளது.

Latest Offers