கிழக்கிலங்கை கைத்தொழில் துறையின் ஒரு புதிய யுகம்: கண்காட்சி ஆரம்பம்

கிழக்கிலங்கை கைத்தொழில் துறையின் ஒரு புதிய யுகம் எனும் தலைப்பிலான கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

கிழக்கு மாகாண கிராமிய தொழில்துறை திணைக்களமும், கிராம அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து நடத்தும் 'கிழக்கிலங்கை கைத்தொழில் துறையின் ஒரு புதிய யுகம்" மலரும் கிழக்கு கைத்தொழில் கண்காட்சி இன்றும், நாளையும் திருகோணமலையில் நடத்தப்பட உள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட்டின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ பிரதம அதிதியாக கலந்து கொண்டு கண்காட்சியினை ஆரம்பித்து வைப்பார்.

மரவேலை, வனைதல், துணிவர்ணமிடல், நெசவு, கடைச்சல், மோட்hர் திருத்தம், நிறமூட்டல், தும்பு கைத்தொழில், வாழைநார் உற்பத்தி போன்ற 17 காட்சி கூடங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படுத்தப்பட உள்ளது.

இவை ஒவ்வொன்றிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட பயிலுநர்களின் வினைத்திறன்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இக்கண்காட்சி காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணிவரையும் பொது மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டு இருக்கும்.

Latest Offers