எதிர்வரும் ஆண்டிற்கான சார்க் அமைப்பின் செயலாளர் நியமனம்

Report Print Ajith Ajith in தெற்காசியா

சார்க் அமைப்பின் அடுத்த செயலாளராக இலங்கை வெளியுறவு அமைச்சின் முன்னாள் செயலாளர் எசல வீரக்கோன் நியமிக்கப்படவுள்ளார்.

இந்த நியமனம் 2020ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வருகிறது.

நியூயோர்க்கில் வைத்து அண்மையில் சந்தித்துக்கொண்ட தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு நாடுகளின் அமைச்சர்கள் இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளனர்.

இதன்படி, எசல வீரக்கோன் சார்க் அமைப்பின் 14ஆவது செயலராக பதவியேற்கவுள்ளார். வீரக்கோன் தற்போது ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக பணியாற்றி வருகிறார்.