துமிந்தவிற்கு என்ன நேரும்? இறுதி தீர்ப்பு இன்று!

Report Print Murali Murali in சிறப்பு

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08ஆம் திகதி இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டிருந்தது.

இந்த துப்பாக்கி சூட்டில் கடும் காயங்களுக்கு உள்ளான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, அன்றைய தினம் ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் தலை பகுதியில் இரண்டு துப்பாக்கி சூடுகள் காணப்பட்டமையினால், உடனடி சத்திரசிகிச்சைக்கு அவர் உட்படுத்தப்பட்டதுடன், அந்த சத்திரசிகிச்சை சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வரை முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து குணமடைந்து இலங்கைக்கு வருகைத் தந்த நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்றிலும் ஆஜராகியிருந்தார்.

இந்த பின்னணியிலேயே இந்த வழக்கு மீதான இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...

Comments