தெஹிவலை மிருகக் காட்சிசாலையில் மூன்று குட்டிகளை ஈன்ற ஜேர்மன் சிங்கம்!

Report Print Murali Murali in சிறப்பு
248Shares

கொழும்பு தெஹிவலை தேசிய மிருகக் காட்சிசாலையில் புதிதாக மூன்று சிங்கக் குட்டிகள் பிறந்துள்ளன.

ஜேர்மனியின் ஹம்பர்க் மிருகக் காட்சிசாலை மற்றும் தென் கொரியாவின் சியோல் மிருகக் காட்சிசாலை ஆகியவற்றிலிருந்து இரண்டு சிங்கங்கள் தெஹிவலை மிருகக் காட்சிசாலைக்கு கொண்டு வரப்பட்டன.

இவ்வாறு கொண்டு வரப்பட்ட பெண் சிங்கத்துக்கு சகீனா எனவும், ஆண் சிங்கத்துக்கு தோர் எனவும் பெயரிடப்பட்ட நிலையில், குறித்த இரண்டு சிங்களுக்கும் மூன்று குட்டிகள் பிறந்துள்ளன.

கடந்த ஒகஸ்ட் மாதம் 28ஆம் திகதி பிறந்த சிங்கக் குட்டிகள் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தேசிய மிருகக் காட்சிசாலை திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த குட்டிகளுக்கு தாய் சிங்கம் விருப்பத்துடன் பாலூட்டி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments