பிரித்தானியாவின் காட்டுப் பகுதியில் வேற்று கிரகவாசிகளின் பெரிய பறக்கும் தட்டு என சந்தேகிக்கப்படும் பறக்கும் பொருள் ஒன்றை ஒருவர் காணொளியாக பதிவு செய்துள்ளார்.
பறக்கும் தட்டு என நம்பப்படும் அந்த பொருள் மேகங்களுக்கு மத்தியில் தென்பட்டு சற்று நேரத்தில் மறைந்து விடுகின்றது.
32 வயதான நபரே இந்த காணொளியை பதிவு செய்துள்ளார். எந்த இடத்தில் இந்த காணொளி பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடப்படவில்லை.
இது குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. சிலர் இதனை வேற்று கிரகவாசிகளின் விமானம் என்று உறுதியாக கூறுகின்றனர். ஆனால், மேலும் சிலர் இது மேகங்களின் ஒரு பகுதியாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.