வானில் தோன்றிய தேவ தூதர்....

Report Print Murali Murali in சிறப்பு
1262Shares

அமெரிக்கா நியூயோர்க் நகரில் அமைந்துள்ள உலக வர்த்தக மையம் வளாகத்திலிருந்து வான் பரப்பை நோக்கி செலுத்தப்பட்ட ஒளிக்கீற்றையின் நுனியில் "தேவ தூதரின்" உருவம் ஒன்று தோன்றியுள்ளது.

இந்த அதிசய சம்பவம் கடந்தவாரம் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை ரிஷ் மெக்கோர்மெக் என்ற புகைப்படக் கலைஞர் புகைப்படமெடுத்துள்ளார்.

ஒளிக்கீற்றையின் இறுதி நுனியில், தேவ தூதரின் உருவம் தெரிந்ததாகவும், அதனை தான் புகைப்படமெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அன்றைய தினம் தான் எடுத்து அனைத்துப் புகைப்படங்களிலும், "தேவ தூதரின்" காட்சி இருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments