தானாக சுற்றும் மர்ம தீவு - அர்ஜெண்டினாவில் கண்டுபிடிப்பு

Report Print Murali Murali in சிறப்பு
833Shares

அர்ஜெண்டினாவின் வட கிழக்கு முனையில் அமைந்துள்ள பரானா டெல்டா ஒரு மிதக்கும் தன்மையுடைய சிறிய தீவாகும்.

130 அடி அகலத்திற்கு தண்ணீர் சூழ்ந்துள்ள இந்த பகுதிக்கு ‘ஐ’ என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அர்ஜெண்டினாவின் திரைப்பட இயக்குனர் செர்கியோ நெஸ்பில்லர் இதனை கண்டுபிடித்துள்ளார்.

இயற்கையாக உருவாகியுள்ள இந்த வட்டமான நிலமும் அதைச்சுற்றியுள்ள நீரும் தானாகவே சுற்றி வருகின்றன. வட்டப் பகுதியில் இருக்கும் மரங்கள் ஒரே இடத்தில் இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திற்கு நகர்ந்துவிடுகின்றன.

இந்த இடம் அற்புதமானதாகவும் ஆச்சரியமானதாகவும் இருக்கிறது. அத்துடன், குறித்த பகுதியில் உள்ள தண்ணீர் பளிங்கு போல குளிர்ச்சியாகவும் இருக்கிறது என செர்கியோ நெஸ்பில்லர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அடிப்பகுதி சதுப்பு நிலமாக இருக்கிறது. மேற்பகுதி நிலம் சுழல்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு ஏராளமான கேள்விகளை உருவாக்கியிருக்கிறது.

இதனிடையே, சிலர் இதனை வேற்றுக்கிரக வாசிகளின் வேலையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Comments