பின்னால் இருந்து துப்பாக்கி சூடு...! முன்னால் இருந்தவருக்கு சூடு பட்டது எப்படி..? யாழ். மாணவர்கள் மரணத்தில் மறைப்படும் உண்மைகள்

Report Print Murali Murali in சிறப்பு
1213Shares

இருவர் அமர்ந்து சென்ற மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தால், பின்னால் இருந்தவருக்கு சூட பட்டிருக்க வேண்டும்.

எனினும், மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் மீது எவ்வாறு குண்டு பாய்ந்திருக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.

23/2 நிலையியற் கட்டளையின் கீழ், நேற்று பாராளுமன்றில் கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் வீதி விபத்தில் உயிரிழந்ததாக ஆரம்பத்தில் பொலிஸார் தெரிவித்தனர். எனினும், மறுநாள் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை தெரியவந்தது.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருந்தது. எனினும், பின்னால் இருந்து சென்றவர் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் உத்தரவிட்டபோதும், நிறுத்தாது சென்றதால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகப் பொலிஸர் தற்பொழுது தமது நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

சட்டத்துக்கு முரணான பொலிஸாரின் இந்த நடவடிக்கையை கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், குறித்த விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிறுத்தாமல் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தால் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர் மீது துப்பாக்கிச் சூடு பட்டிருக்க வேண்டும்.

எனினும், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் மீது எவ்வாறு குண்டு பாய்ந்தது என்ற உண்மை பக்கச்சார்பற்ற விசாரணைகளில் கண்டறியப்பட வேண்டும் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments