"பிட்டுக்கு மண்சுமந்த பெருமானர்" பாடலை பாடி சபையோரின் பெரும் வரவேற்பை பெற்ற இஸ்லாமியர்

Report Print Kumar in சிறப்பு
3010Shares

மட்டக்களப்பில் அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் இஸ்லாமிய சகோரர் ஒருவர் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரனுக்காக பாடப்பட்ட பிட்டுக்கு மண்சுமந்த பாடலை உணர்வுபூர்வமாக பாடி சபையோரின் பெரும் வரவேற்பினைப்பெற்றார்.

மருதமுனையை சேர்ந்த இஸ்லாமிய பாடகரான மருதமுனை கமால் என்பவர் கிழக்கு மாகாண தமிழ் இலக்கியவிழாவில் நாகூர்கனியின் பாடல் ஒன்றைப்பாடினார்.

அதனைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பாராத வகையில் விடுதலைப்புலிகள் காலத்தில் சாந்தன் இசைக்குழுவினால் இசைக்கப்பட்டு சாந்தனால் பாடப்பட்ட கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரரின் பிட்டுக்கு மண்சுமந்த பெருமானார் என்ற பாடலை பாடினார்.

இந்த பாடலுக்கு சபையில் பலத்த கரகோசத்தின் மத்தியில் பாடினார். அவரன் பாடலை நிகழ்வின் கலந்துகொண்ட அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள்.

Comments