யாழ் மாவட்டத்திலிருந்து கலா பூசணம் விருது பெற 31 பேர் தெரிவு

Report Print Samy in சிறப்பு
99Shares

யாழ் மாவட்டத்திலிருந்து கலாபூசணம் விருதுபெற 31 பேர் தெரிவுயாழ் மாவட்டத்திலிருந்து கலாபூசணம் விருது பெறுவதற்காக 31 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலக மேலதிக அரச அதிபர் பா. செந்தில் நந்தனன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் கலை வளர்ச்சிக்காக தங்களின் வாழ் நாட்களை அர்ப்பணித்து சேவையாற்றிய கலைஞர்களை கௌரவித்து வழங்கப்படுகின்ற கலாபூசணம் அரசு விருது வழங்கும் விழா இவ்வருடம் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி கொழும்பு 7 இல் அமைந்துள்ள நெலும் பொக்குண சர்வதேச கலையரங்கில் நடைபெறவுள்ளது.

குறித்த விழாவிற்காக 37 பேரையாழ் மாவட்ட செயலகம் பரிந்துரை செய்த நிலையில் 31 பேர்கள் தெரிவு செய்யப்பட்ட தாகவும் யாழ் மாவட்ட செயலகத்தினர் தெரிவித்தனர். இதில்

அன்ரனி சவரிமுத்து , பத்திநாதன் சைமன் (ஊர்காவற்துறை), -02

கனகரட்ணம் பேரின்பநாயகி, பிரான்ஸிஸ் ஜுலிஸ் கொலின். சபாவதிபிள்ளை பாலசிங்கம், முடியப்பு சிங்கராஜா , நகமணி கோபாலகிருஸ்ணா ( யாழ் நகரம்) - 05

கபிரியேல் பிலந்திரன்.- அல்லைப்பிட்டி - 01

சின்னத்துரை நவரட்ணம் - கரவெட்டி - 01

வேலுப்பிள்ளை நடராசா, வேலாயுதபிள்ளை - காரைநகர், - 02

வேலாயுதம் விநாசித்தம்பி,- மிருசுவில், - 01

வல்லிபுரம் குமாரசாமி, பாலசுப்பிரமணிய ஐயர் பாலச்சந்திரன், ரவீந்திர கிரிஷாந்தி - சுன்னாகம், - 03

பிரம்மஸ்ரீ வைத்தீஸ்வர சர்மா, நித்தியானந்த சர்மா கொக்குவில் - 01

கந்தையா மருதம் - வேலணை, - 01

நடராசா நாகராசா, மைக்கல் அல்வின்ராஜ், செல்லையா சிவபாதம் - பண்டத்தரிப்பு, - 03

கைலாயபிள்ளை தர்மகுலசிங்கம் - அல்வாய், - 01

ஐயம்பிள்ளை சின்னராசா, செல்லத்துரை சிவசுப்பிர மணியம் - மூளாய், - 02

கந்தர் வைத்தியலிங்கம் குணசேகரம், கனகசபை இராஜலிங்கம் - கோப்பாய், - 02

சின்னத்தம்பி திவ்யநாயகம்-புத்தூர், - 01

கிருஸ்ணசாமி வேதநாயகம் - மீசாலை, - 01

கந்தன் பாலன் - வல்வெட்டித்துறை - 01

ரட்ணம் சத்தியானந்தம் - பருத்தித்துறை, - 01

சுந்தரமூர்த்தி ஐயர் வரதராசன் - தெல்லிப்பளை, - 01

விமலாதேவி நாகேஸ்வரன் - இணுவில் - 01

ஆகிய 31 பேருமே யாழ்.மாவட்டத்திலிருந்து கலாபூசண விருதைப் பெறவுள்ளனர்.

Comments