கோல்பேசில் கோவில் கட்ட முடியுமா..? ஜே.வி.பியுடன் முட்டிக்கொண்ட கூட்டமைப்பு

Report Print Murali Murali in சிறப்பு
459Shares

கொழும்பு காலி முகத்திடலில் அல்லது வெள்ளவத்தையில் பலவந்தமாக காணியை பெற்று கோவில் அமைக்க முடியுமா என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

புத்தசாசன அமைச்சின் மீதான விவாதம், பாராளுமன்றில் இன்று இடம்பெற்றது. இதன் போது இந்து கோயில்கள் மற்றும் விகாரைகள் தொடர்பில், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் விஜிதஹேரத் கருத்து தெரிவித்திருந்தார்.

இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கும் விஜிதஹேரத்துக்கும் இடையில், கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

வடக்கில் புதிதாக பௌத்த விகாரைகள் முளைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் சுட்டிக்காட்டிய போது குறுகிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தாம் மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கைகளை மதிப்பவன். இந்த உயரிய சபையில் ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டு கொள்ள வேண்டியதில்லை.

ஒரு நாளைக்கு நேரத்தை ஒதுக்கி கிளிநொச்சிக்கு வாருங்கள். நாங்கள் கூட்டிக்கொண்டு போகிறோம். தற்போது கிளிநொச்சியில் புதிதாக வைக்கப்பட்டுள்ள விகாரைகளை காண்பிக்கின்றோம்.

இராணுவ சீருடையில், இராணுவ சின்னத்துடன் பாடசாலைக்கு செல்லும் சிறுவர்கள் தொடர்பில் உங்களுக்கு காண்பிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் கிளிநொச்சியில் ஒரே ஒரு பௌத்த விகாரையே இருந்தது. எனினும், 2009ஆம் ஆண்டுக்கு பின்னரே இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.

“வெள்ளவத்தையில் காணியைப் பெற்று கோயில் கட்டலாமா? அல்லது காலிமுகத்திடலில் கோயில்தான் கட்டலாமா?” என்றும் கேட்டார்.

Comments