சொலமன் தீவு பகுதியில் பாரிய நிலநடுக்கம்..! பாரிய சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை

Report Print Murali Murali in சிறப்பு
1783Shares

சொலமன் தீவுகளுக்கு அண்மித்த பகுதியில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவு கோளில் 7.7 என பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பப்புவா நியூகினி, நவுறு, சொலமன் தீவுகள் உள்ளிட்ட பகுதிகளை சுனாமி தாக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்னும் சில மணி நேரங்கள் சுனாமி ஏற்பட கூடும் எனவும், அது பாரிய பேரழிவை ஏற்படுத்த கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments