சிவபெருமானும், புத்தரும் சிரிக்கின்றனர்...! விக்கினேஸ்வரன் மீது பகிரங்க குற்றச்சாட்டு

Report Print Murali Murali in சிறப்பு

கோயில்கள் மற்றும் விகாரைகளுக்கு சென்று வரும் பக்தர்களை பார்த்து சிவபெருமானும், புத்தரும் சிரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற புத்தசாசன அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கோயில்களுக்கு பௌத்தர்களும், விகாரைகளுக்கு இந்துக்களும் சென்று வருகின்றர்.

அதேபோன்று விகாரைகளில் சிவபெருமான், விநாயகர் போன்ற தெய்வங்கள் வைக்கப்பட்டுள்ளனர். இந்து கோயில்களில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வணங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், வெளியில் வந்து இரு தரப்பினரும் அடித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ள அவர், இதனை பார்த்து சிவபெருமானும், புத்தரும் சிரிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதன் போது குறுக்கிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கில் விகாரைகளை நிர்மாணிக்க முடியாது என தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. வடக்கில் 19 ஆயிரம் சிங்களவர்கள் இருந்தார்கள். அதேபோல் 80 ஆயிரம் முஸ்லிம் மக்கள் இருந்தார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பதிலளித்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் விஜிதஹேரத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது போல, பௌத்தர்களுக்கான அதிகாரத்தில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments