அகதிப்பெண் ஒருவர் ஆப்கானிஸ்தான் விமானப்படை விமானியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சபியா பெரோஷி என்ற அகதி பெண் இருவரே விமானியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
1990ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தலிபான் தீவரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது காபுல் நகரில் இருந்து வெளியேற்றப்பட்ட குறித்த பெண் பாக்கிஸ்தானில் அகதியாக தஞ்சமடைந்துள்ளார்.
பின்னர் தலிபான்களின் ஆதிக்கம் வீழ்ச்சி கண்ட பிறகு மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்பிய குறித்த பெண், படித்து பட்டம் பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சபியா பெரோஷி ஆப்கானிஸ்தானின் 2வது பெண் விமானி என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்த கருத்து தெரிவித்துள்ள சபியா பெரோஷி,
இராணுவ சீருடை அணிந்தவுடன் பெண்ணான நான் மிகவும் பெருமை அடைவதாக உணர்ந்தேன். இப்பணி தனக்கு மிகவும் பிடித்துள்ளது எனவும் கூறியுள்ளார்.