இரா. சம்பந்தன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்..!

Report Print Murali Murali in சிறப்பு
818Shares

எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகபேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களவர்கள் மேற்கொண்ட அடாவடித்தனங்களுக்கு சிங்கள தலைவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக்கோரியுள்ளனர்.

சிங்கள மக்கள் மூலம் தமிழ் மக்கள் தண்டிக்கப்பட்டமை அல்லது கருப்பு ஜூலை கலவரத்தில் நடைபெற்ற அசம்பாவிதம் குறித்து ஒட்டுமொத்த சிங்கள மக்கள் சார்பிலும் மனிப்புக் கேட்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மன்னிப்புக்கோரினார்.

அதேபோன்று யாழ். நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பில் அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் வைத்து மன்னிப்புக்கோரினார்

எனினும், தமிழர் தரப்பினாலும் ஆயுதக் குழுக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனங்களுக்கு தமிழர் தலைமைகள் பகிரங்க மனிப்புக்கோரியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதக் குழுக்களினால் தற்போதைய தமிழர் அரசியல் தலைமைகளினால் சிங்கள மக்களுக்கு நடந்த அசம்பாவிதங்கள் குறித்து இதுவரையில் தமிழர் தலைமைகள் மன்னிப்புக்கோரியதில்லை.

விடுதலைப்புலிகள் மூலம் தலதாமாளிகை தாக்கப்பட்டமை, ஸ்ரீமகா போதி தாக்கப்பட்டமை, பெளத்த பிக்குகள் கொல்லப்பட்டமை, சிங்கள அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுக்கு இதுவரையில் தமிழர் தரப்பு வருந்தவும் இல்லை.

சிங்கள தரப்பினர் மன்னிப்புக் கேட்கும் மனப்பாங்குடன் செயற்படும் போதும் தமிழர் தரப்பினால் ஏற்படுத்தப்பட்ட குற்றங்களுக்கும் தமிழர் தலைமைகள் மன்னிப்புக் கேட்க வேண்டும். எனவே, எதிர்க்கட்சி தலைவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments