தீபாவின் புதிய திட்டம்..! திக்குமுக்காடி போயுள்ள மன்னார்குடி தரப்பு..! பெப்ரவரி 24 நடக்க போவது என்ன..?

Report Print Murali Murali in சிறப்பு
1596Shares

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பெப்ரவரி 24ம் திகதி தம்முடைய புதிய கட்சியை தொடங்க ஜெயாவின் அண்ணன் மகள் தீபா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அதனை தடுக்கும் முயற்சியில் மன்னார்குடி தரப்பு தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தமிழக ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் திகதி ஜெயலலிதா உயிரிழந்ததை தொடர்ந்து, அதிமுக கட்சயின் பொது செயலாளராக வி.கே.சசிகலா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எனினும், சசிக்கலாவை அந்த கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஏற்க மறுத்துள்ள நிலையில், தீபாவை தலைமை ஏற்குமாறு கோரிக்கை எழுந்துள்ளன.

இந்நிலையில் தீபாவின் வீட்டை அதிமுக தொண்டர்கள் முற்றுகையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், ஆர்கே நகர் இடைத் தேர்தலில் தீபாதான் போட்டியிட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து பேசிய தீபா தாம் அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தொண்டர்களின் தன்னெழுச்சி ஒரு பேரியக்கமாக மாறும் வகையில் பொறுத்திருப்போம் என்பதே தீபாவின் தற்போதைய திட்டம் என கூறப்படுகின்றது.

இந்த தன்னெழுச்சி எப்படியும் மாபெரும் பேரியக்கமாக உருவாகும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ள தீபா, தனிக் கட்சிக்கான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளாகும். அன்றைய தினம் ஜெயாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் தீபா புதிய கட்சியை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், குறித்த தினத்தில் மன்னார்குடி தரப்புக்கு எதிரான அதிமுக தலைவர்கள் தீபாவுடன் கைகோர்க்க கூடிய சாத்தியம் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, தீபாவின் இந்த திட்டத்தினால் மன்னார்குடி தரப்பு திக்குமுக்காடி போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே, தீபாவின் திட்டத்தை தடுக்கும் முயற்சியில் மன்னார்குடி தரப்பு தீவிர கவனம் செலுத்தியுள்ளது.

அத்துடன், தீபாவுடன் சமாதான பேச்சு வார்த்தைக்கு மன்னார்குடி தரப்பு முயற்சித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments