மனிதனின் கடந்த காலத்தை மறைத்து வைத்துள்ள கண்டம் - நாசா வெளியிட்டுள்ள ஆதாரம் இதோ!

Report Print Steephen Steephen in சிறப்பு
418Shares

அந்தாட்டிக்கா கண்டம் என்றும் கூறியதும் அங்குள்ள கடும் குளிர் மற்றும் வெள்ளை நிற உறை பனியுடன் கூடிய நிலம் மற்றும் அது மனிதனுக்கு உயிர்வாழ ஏற்ற காலநிலையை கொண்ட கண்டம் அல்ல என்பதே எமது நினைவுக்கு வரும்.

எனினும் இன்று மனிதன் வாழ முடியாத கண்டமாக இருந்தாலும் ஒரு காலத்தில் அங்கு மனிதர்கள் வாழ்ந்தார்கள். என்று கூறினாலும் அதனை நம்ப முடியாது.

எனினும் அங்கு மனிதன் வாழ்ந்துள்ளான் என்பதை (கூகுள் எர்த்) உறுதிப்படுத்தியுள்ளது.

பனி உருகிய ஓரளவு உஷ்ணம் காணப்படும் பகுதியில் 400 அடி நீளமான மிகப் பெரிய கட்டடத்தின் பகுதிகள் தொடர்பான புகைப்படங்களை கூகுள் எர்த் தெளிவாக படம்பிடித்துள்ளது.

இந்த பாரிய கட்டடத்தை யார் கட்டியிருப்பார்கள் என்ற கேள்விக்கு விடை தேடுவது கடினமானது.

எவ்வாறாயினும் அந்தாட்டிக்கா கண்டம் ஒரு காலத்தில் மனிதன் வாழ்ந்துள்ளான் என அடையாளப்படுத்துவதற்கு இது சிறந்த சான்று என கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி அசோக திரிபாதி கூறியுள்ளார்.

பூமியில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக அந்தாட்டிக்கா கண்டத்தில் உறை பனி ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

கூகுள் எர்த் பிடித்துள்ள புகைப்படத்தை ஆராய்ந்த நாசா விஞ்ஞானிகளும் அந்த கட்டடம் மனிதனால் கட்டப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் அந்தாட்டிக்கா கண்டத்தில் பனி உருகியுள்ள பகுதியை 2 கிலோ மீற்றர் தொலைவில் இருந்து நாசா அதன் நிலைமைகளை அவதானித்துள்ளது.

தெளிவுப்படுத்த முடியாத மனித செயற்பாடுகள் பண்டைய காலத்தில் இங்கு இருந்திருக்கலாம் என இதன் மூலம் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட அந்தாட்டிக்காவில் உள்ள பிரமிட் போன்ற ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கவனத்தில் கொண்டுள்ளனர்.

அந்தாட்டிக்கா கண்டத்தை பற்றி உறுதிப்படுத்த முடியாத மர்மங்கள் இருந்த போதிலும் அந்தாட்டிக்கா என்பது மனிதனின் கடந்த காலத்தை மறைத்து வைத்திருக்கும் கண்டம் என்பது மட்டும் உண்மையானது.

Comments