111 வயதில் 11 குட்டிகளுக்கு தந்தையான டைனோசர்! ஆச்சரியம் ஆனால் உண்மை!

Report Print Gokulan Gokulan in சிறப்பு
440Shares

மனிதர்களைப் போலவே மிருகங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலமே இருக்கும் மனிதனின் இன ரீதியிலான விருத்தியைப்போலவே மிருகங்களுக்கும் தனியானதொரு கோட்பாடு உள்ளது.

சாதாரணமாக மிருகங்கள் குட்டியீனும் வயதெல்லையும் இவ்வளவாகவே இருக்க முடியும் என்று ஆய்வாளர்களாலும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 111 வயதில் தந்தையான மிருகம் பற்றி தெரியுமா? ஆம் தெரிந்தால் ஆச்சரியத்தில் மூழ்கித்தான் போவீர்கள்.

111 வயதில் 11 குட்டிகளுக்கு டைனோசர் ஒன்று தந்தையாகிய விசித்திரம் இடம்பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் ஆதாரம் முன்வைத்துள்ளார்கள்.

இன்றைக்கு அல்ல. டைனோசர்கள் வாழ்ந்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக ஆய்வாளர்கள் கணிப்பிட்டுள்ள வருடமொன்றில் நடந்த விசித்திர சம்பவமே இது.

இவ்வாறு குட்டியீன்ற டைனோசர் நியுசிலாந்திற்கு உரித்தானது என்றும் அடையாளப் படுத்தப்பட்டுள்ளது.

டுவடரா

பெயரைக் கேட்கும் போதே விசித்திரமாக இருக்கின்றதா? குறித்த உயிரினம் ஓணானின் உருவத்தை ஒத்திருந்தாலும் உண்மையில் அவை ஓணான் வகையை சார்ந்ததல்ல.

20,000 வருடங்களுக்கு முன்பு புவியில் வாழ்ந்ததாக கருதப்படும் டைனோசர் குடும்பத்தை சார்ந்தது. என கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு ஏனைய உயிரினங்களைப் போல இரண்டு கண்களெல்லாம் கிடையாது. மாறாக 3 கண்களை கொண்டது இந்த டுவடரா.

இந்த கண் விற்றமின் D தயாரிப்பதற்கு சூரியனிலிருந்து வரும் கதிர்களை உறிஞ்சி எடுக்கின்றது. ஆனால் இந்த ஊர்வன வளர வளர மூன்றாவது கண் இல்லாமல் போய் விடுகின்றது.

இந்த ஊர்வனம் நியுசிலாந்தில் மட்டும் வாழ்கின்ற டுவடரா எனம் தாவர உண்ணியாகும்.

இவ்வூர்வனத்தை நியுசிலாந்தை சேர்ந்தவர்கள் “ஹென்றி“ எனும் செல்லப் பெயர்க் கொண்டு அழைக்கின்றனர்.

இந்த டுவடரா ஊர்வனம் நியுசிலாந்தில் தற்போது இன்வெகாசில் நகர சவுத்லண்ட் அரும் பொருட் காட்சி சாலை அமைந்துள்ள இடத்தில் வாழ்ந்துள்ளது. குறித்த உயிரினம் தொடர்பாக மேற்கொண்ட ஆய்விலேயே அதன் வாழ்க்கைக் கோலம் தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த டுவாடரா டைனோசர் இனத்தை ஞாபகப்படுத்தும் விதமாக அதன் 111 வயது பிறந்தநாள் கடந்த சில வருடங்களுக்கு முன் நியுசிலாந்து ஆராய்ச்சியாளர்களால் கொண்டாடப்பட்டுள்ளது.

இதன் துணைவியான மில்டர் எனும் டைனோசர் இதனைவிட 37 வயது இளமையுடையது எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

புற்று நோய் காரணமாகவே இவ்வுயிரினம் அழிவடைந்ததாகவும் கூறப்படுகின்றது. இதன் வழி தோன்றலில் உருவான டுவடரா குட்டிகளை நியுசிலாந்தின் அரும் பொருட் காட்சியகத்தில் அதிகாரிகள் இன்னமும் பாதுகாத்து வருகின்றனர்.

டைனோசர்ஸ் பரம்பரையில் 200 மில்லியன் வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிந்து போயுள்ள நிலையில் அதிலிருந்து மரபு வழியில் தோன்றியதாக விஞ்ஞானிகள் நம்பும் ஊர்வன வகையும் தற்போது அழிந்து கொண்டு வருகின்றது.

இந்நிலையில் அந்தக் குடும்பத்தை நினைவுக் கூரத்தக்க நியுசிலாந்திற்கு மட்டுமே உரிய இந்த ஓணான் வகையைப் பாதுகாப்பதில் அந்நாட்டு அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

Comments