இது மட்டும் அன்றே நடந்திருந்தால் இன்று இலங்கையில் தமிழருக்கும் தனி தேசம் கிடைத்திருக்கும்!

Report Print Gokulan Gokulan in சிறப்பு
339Shares

இன்றைய இலங்கைத் தமிழர்களின் நிறைவேறாத கனவு எமக்கென தனி தேசம் கிடைக்குமா என்பதே! அந்தவகையில்தான் தேசத்திற்காக போராட சென்று விடுதலைப்புலிகளும் லட்சக்கணக்கான மக்களும் படுகொலை செய்யப்பட்டனர்.

சற்று சிந்தியுங்கள்! இலங்கையில் தமிழருக்கென தனி வரலாறு இருக்கின்றது. எத்தனையோ தமிழ் மன்னர்கள் ஆண்ட நாடு இது. அப்படியிருந்தும் தமிழர்கள் வாழ்ந்தும் ஏன் எமக்கு தனியானதொரு அங்கீகாரம் வழங்கப்படவில்லை?

ஆக யாரோ ஒருவர் செய்த பிழைக்குதான் இன்று நாம் தண்டனை சுமந்து கொண்டு இருக்கின்றோம் அதனால்தான் முள்ளிவாய்க்காலிலே எமது சொந்தங்களை புதைத்து விட்டு வந்தோம்.

இன்றைய எமது வரலாறு இன்று நேற்று எழுதப்பட்டது அல்ல மாறாக எல்லாளன் காலத்தில் எழுதப்பட்டது!. இலங்கையை எத்தனையோ மன்னர்கள் ஆட்சி செய்திருக்கையில் எல்லாளன் 44 ஆண்டுகள் தனியொரு மனிதனாக இலங்கையை ஆட்சி செய்தான்.

எதிரிகளை நடுங்கச்செய்யும் பலம் படைத்த எல்லாளன் தமிழர்கள் இலங்கையை ஆள தகுதியானவர்கள் என்பதனை அன்றே பறைசாற்றினான்.

வீரம் விவேகம் என யாரும் எதிர்க்க முடியாத குணம் படைத்த இவனது வீரம் உடன் இருந்த காட்டிக்கொடுப்புகளாலும், பகைவர்களாலும் கைவிட்டு போனது.

தன் தந்தையை பெண் என கூறி விட்டு பெண்களுக்கான உடைகளை வாங்கி இதையே இனி நீங்கள் அணிந்து கொள்ளுங்கள் என கூறி விட்டு தந்தையை பிரிந்த துட்டகைமுனு, எல்லாளனுடன் பல தடவைகள் தோற்றுதான் போனான்.

இப்படி பலம் பொருந்திய ஒரு வீரன் போர்க்களத்தில் நேரடியாக கொல்லப்படவில்லை. மறைமுகமாக கொல்லப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

அதாவது போர்க்களத்தில் போரிட்டு கொண்டிருந்த சமயம் காதிலிருந்து கழன்று விழுந்த காதணியை எடுப்பதற்காக குனிந்த போது தலையில் வெட்டுண்டு கொல்லப்பட்டதாக சான்றுகள் இருக்கின்றன.

இவ்விடத்தில் சில நேரம் எல்லாளன் கொல்லப்படாமல் இருந்திருந்தால் இலங்கையில் தமிழ் ஆட்சி பாரம்பரியம் தொட்டே வந்திருக்கும்.

இன்று நாமும் விடுதலைக்காக போராடியிருக்க மாட்டோம் தமிழருக்கென புலிகள் எனும் இயக்கமும் தோன்றியிருக்காது, அதைவிடுத்து எமது உறவுகளையும் இழந்திருக்க மாட்டோம் அல்லவா?

அன்றைய போரில் நிதானத்தை மட்டும் எல்லாளன் கடைப்பிடித்திருந்தால் போரில் தோற்றிருக்கவே மாட்டான். தொடர்ந்தும் தனது ஆட்சியையே பலப்படுத்தியிருப்பான்.

அன்று ஒரு தமிழன் செய்த பிழை இன்று எத்தனை தமிழர்களின் உயிரை சூறையாடியிருக்கின்றது.

இப்போது கூறுங்கள் இது மட்டும் அன்றே நடந்திருந்தால் இன்று தமிழருக்கும் தனியொரு தேசம் கிடைத்திருக்கும் அல்லவா?

Comments