30 வருட வரலாற்றில் இடம்பெறாத புத்தக கண்காட்சி சீனாவில்! இலங்கை வெளியீட்டாளர்களுக்கும் வாய்ப்பு

Report Print Ramya in சிறப்பு
33Shares

சீனா பீஜிங்கில் இடம்பெறவுள்ள புத்தக கண்காட்சி நிகழ்வு ஒன்றிற்கு இலங்கை வெளியீட்டாளர்கள் 16 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழு ஒன்று சீனா செல்லவுள்ளது.

இலங்கை வெளியீட்டாளர் பிரதிநிதிகள் குழு இந்த மாதம் 12 ஆம் திகதி சீனா செல்லவுள்ளனர் என சீன சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

30 வருட வரலாற்றில் இடம்பெறாத புத்தக கண்காட்சியாக குறித்த நிகழ்வு அமையவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்தின் உதவி திட்டத்தின் ஒரு பகுதியாக குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த புத்தக கண்காட்சியின் ஊடாக இரு நாடுகளிலும் உள்ள வெளியீட்டாளர்களுக்கு இடையில் நெருக்கமான பதிப்புரிமை உறவுகளுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என கண்காட்சி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் சீனாவின் வெளியீட்டு துறையில் முன்னேற்றம் செலுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தக கண்காட்சியின் போது 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 5 இலட்சத்திற்கும் அதிகமான புதிய புத்தகங்கள் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கண்காட்சி இந்த மாதம் 12 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை நடாத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments