விமானத்தினுல் பாம்பு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, எமிரேட்ஸ் விமானத்தின் சேவை ரத்து செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்று கிழமை இடம்பெற்றுள்ளது. மஸ்கட்டில் இருந்து துபாய்க்கு பயணிக்கவிருந்த EK0863 என்ற விமானத்தின் சேவையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
குறித்த விமானம் பயணிப்பதற்கு முன்னரே பாம்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, விமானத்தின் சேவை ரத்து செய்யப்படுவதாக எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
அத்துடன், குறித்த விமானம் முழுவதுமாக சோதனை செய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் விமான சேவை வழமைக்கு திரும்பும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மெக்சிகோவின் டொரோன் நகரில் இருந்து மெக்சிகோ நகரத்துக்கு பயணித்த விமானம் ஒன்றில் இருந்து பாம்பு கண்டுபிடிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.