உலகில் நடக்கும் சுவாரஷ்யமான விடயங்களை தினம் தினம் தெரிந்துக் கொள்வதில் பலரும் ஆர்வம் செலுத்தி வருகின்றோம்.
சில விடயங்கள் எம்மை அச்சுறுத்துகின்றன. சில விடயங்கள் எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.ஆனால் ஆச்சரியங்களோடு சேர்த்து எமக்கு அனுபவத்தையும் பெற்றுக் கொடுக்கும் சில விடயங்களும் எமக்கு தெரியாமல் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில் குறித்த பதிவு நிச்சயம் மிகச்சிறந்த அனுபவத்தைப் உங்களுக்குப் பெற்றுக்கொடுக்கும்.
ஒரு நகரிலிருந்து பிரிதொரு நகருக்கு நடை வழியில் சென்றாலே எமக்கெல்லாம் பாரிய கடினமாகிவிடும். அதிலும் சுரங்க வழியில் சென்றால் மூர்ச்சையாகிவிடுவோம் அல்லவா? உண்மையில் ஒரு நகரை பிரிதொரு நகருடன் இணைக்கும் 13 கிலோ மீற்றர் நீளமான சுரங்கமும் இருக்கின்றது.
நாட்டிற்கு 150மெகா வோல்ட் மின்னுற்பத்தியைப் பெற்றுக்கொடுப்பதற்காக 2000 ஆம் ஆண்டில் கொத்மலை மின்னுற்பத்தி செயற்றிட்டம் தலவாக்கலையில் செயற்படுத்தப்பட்டது.
குறித்த செயற்றிட்டத்தில் மிக விரைவாக நீரைக் கொண்டு செல்வதற்காக நீர் மின் சுரங்கம் அமைக்கப்பட்டது.
கொத்மலை மின் உற்பத்தி நிலையத்திலிருருந்து செக்கன் ஒன்றுக்கு 3 கன அடி உயரத்தில் நீர் சுரங்கத்திற்குள் உட்பிரவேசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலையிலிருந்து நியகம்தொரவில் அமைந்துள்ள மின்னுற்பத்தி நிலையம் வரை நீர் பயணிக்கின்றது.
இதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் பணிகள் மிக இலகு வானதாக இருக்கவில்லை. மலைகளை குடைந்துக்கொண்டு பணியாற்றிய எம்மவரின் இந்த உழைப்பு வரலாற்றில் நிச்சயம் பேசப்பட வேண்டியவைதான்.
இதன் வழியே பயணிக்கும் போது தலவாக்கலையில் தொடரும் பயணம் பூண்டு லோயா நகரை அண்மித்த பகுதியில் நிறைவடைகின்றது.
இதன் அகலம், உயரம் என்பவற்றை கருத்திற் கொண்டு பார்க்கும் போது இலங்கையின் இராட்சத சுரங்கம் எனவும் இது வர்ணிக்கப்படுகின்றது.
ஜப்பானிய கலைஞர்களின் உழைப்புடன் எம் நாட்டவரின் உழைப்பும் ஒன்றிணைந்ததாக கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கும் மேல் குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இன்றளவில் இலங்கையில் உள்ள சுரங்க வழிப்பாதையில் ஒரு நகரை இன்னொரு நகரோடு இணைக்கும் முதல் சுரங்கப்பாதையும் இதுதான், இலங்கையின் மிக நீளமான நீர்மின் சுரங்கமும் இதுதான்.
இச்சுரங்க வழிப்பாதையின் மூலம் 150 மெகாவோற் மின்சாரத்திட்டம் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும் 220 மெகாவோற் மின்சாரம் வரையில் தற்போது பெறப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
பலராலும் ஈர்க்கப்படும் குறித்த நீர்மின் சுரங்கம் இலங்கையரின் திறமைக்கு சான்று பகிரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மேலும் இலங்கையில் அழிக்கமுடியாத மிகப்பெரும் செயற்திட்டமாக எதிர்காலத்தில் அமையும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை!.
இந்த பதிவுகளையும் பார்வையிட விரும்புகிறீர்களா?
இலங்கையில் இருந்து இனி நேரடியாகவே இந்தியாவை காணலாம். அதிசயம் ஆனால் உண்மை!
வரலாற்றில் புதைந்துபோன அசோக வனம்...! மறைந்திருக்கும் மர்மம் என்ன..?