உலகில் முதல் முறையாக கடலுக்கு அடியில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகம் என்ற பெறுமையையும், சிறப்பையும் மியூசியோ அட்லான்ட்டிக்கோ காட்சியகம் பெறுகின்றது.
தற்காலத்தில் கடற்பிரதேசங்கள் எதிர்நோக்கும் அபாயங்கள் தொடர்பில் விழிப்புணர்பு ஏற்படுத்தும் நோக்கில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த அருங்காட்சியகம் அத்திலாந்திக் சமுத்திரத்தில் ஸ்பெய்னுக்குச் சொந்தமான லேன்ஸரோத்தே தீவிற்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளதுடன்.
இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதனை பிரபல சிற்பக்கலைஞர் ஜேஸன் டிகேர்ஸ் டெய்லரின் வடிவமைத்துள்ளார்.
இந்த அருங்காட்சியகத்தின் பணிகள் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகி டிசம்பர் மாதம் நிறைவடைந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சுமார் 300க்கு மேற்பட்ட சிற்பங்கள் அடங்கிய 12 தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன். 14 மீற்றர் ஆழத்தில் இந்த அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், இவற்றுள் 100 தொன்கள் எடையுள்ள 30 மீற்றர் நீள தாவரவியல் பூங்கா மற்றும் மனிதச் சுழி என்ற பெயரில் மனிதனின் உண்மையான அளவைகொண்ட 200 மனிதச் சிலைகளாலான ஒரு சக்கரம் போன்ற வியத்தகு சிற்பங்கள் வடிவகைப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தின் சிற்பங்கள் அனைத்தும் அனைவரையும் அச்சிரியத்திற்கு ஆழ்த்தியுள்ளது.