ஜனாதிபதியாக தெரிவாகியதன் பின்னர் முதலாவது ஊடக சந்திப்பு..! ட்ரம்ப் கூறியது என்ன..?

Report Print Murali Murali in சிறப்பு
821Shares

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி உலக மக்கள் அனைவரினதும் பார்வை அமெரிக்கா பக்கம் திரும்பியிருந்தது. காரணம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்.

இந்த தேர்தலில் பலரின் எதிர்ப்பார்ப்பையும் பொய்யாக்கி குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் எதிர்பாராத விதமாக வெற்றி பெற்றார்.

இந்நிலையில், ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் முதன் முறையாக செய்தியாளர்களை சந்தித்த டொனால்ட் ட்ரம்ப், தம் மீது சுமத்தப்பட்டிருந்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்திருந்தார்.

குறிப்பாக தமக்கும் ரஷ்யாவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என அவர் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறு தொடர்பு படுத்தி கூறுவது என்பது வெறும் வதந்தி எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, தனது நிறுவனங்களை தனது இரண்டு மகன்களும் கவனித்து வருகின்றனர் எனக் கூறிய அவர், எனது வருமான வரி கணக்குகள் குறித்து ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அது தொடர்பான தகவல்களை வெளியிட போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், கடவுளால் உருவாக்கப்பட்டதை விட அதிகப்படியான வேலை வாய்ப்புகளை உருவாக்குபவனாக நான் இருப்பேன் என டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டமைக்கு ரஷ்யா மறைமுகமாக உதவியதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments