கனடா பிரம்ரன் மாநகரசபையில் சிறப்புரை ஆற்றினார் விக்கி!

Report Print Vino in சிறப்பு

கனடா பிரம்ரன் மாநகரசபைக்கும் வவுனியாவுக்குமான உறவுப் பாலத்தின் முதலாவது சந்திப்பில் கலந்து கொண்டு வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் உரையாற்றினார்.

பிரம்ரன் மாநகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனுடன் நூற்றுக்கணக்கான பிரம்ரன் வாழ் தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் மாநகர வளாகத்தில் சிறப்புரையை ஆற்றியதோடு, அங்கு கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களோடும் வடமாகாணத்தின் நிலைப்பாடு குறித்து எடுத்துக்கூறியிருந்தார்.


இதன்போது வடக்கில் முள்ளதண்டு பாதிப்புற்றவர்களுக்காக பிரம்ரன் மாநகர மக்களால் 45000 டொலர் நிதியுதவி முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments