பிரித்தானிய இளவரசியின் இளைஞர் தலைவராக இலங்கை இளைஞர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹெஸ்டென் பரம்பரையை ஸ்தாபிக்க முன்னின்று செயற்பட்ட சேனெல் வன்னி ஆராய்ச்சியே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக பீ.பீ.சி செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கிலான பயிற்சிப் பட்டறையொன்றை நடாத்தியமைக்காகவே இவர் பிரித்தானிய இளவரசியின் இளைஞர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் இளைஞர் பிரதிநிதித்துவத்தினால் கடந்த ஆண்டு நடாத்தப்பட்ட ஐ.நா பொதுச் சபை கூட்டத் தொடரில் கலந்துக்கொண்டு பல அனுபவங்களை பரிமாறிக் கொண்டதாக சேனெல் வன்னி ஆராய்ச்சி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே அவர் பிரித்தானிய இளவரசியில் இளைஞர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.