நனவாகும் தீர்க்கதரிசனம்..! அழியும் உலகம்...! அச்சத்தில் மக்கள்

Report Print Murali Murali in சிறப்பு
2570Shares

அண்மைய நாட்களில் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக உலகின் பல பாகங்களிலும், பல்வேறு அழிவுகள் இடம்பெற்றுகொண்டிருக்கின்றன.

குறிப்பாக கடுமையாக பனிப்பொழிவு தற்போது மக்களை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. இலங்கை உள்ளிட்ட நாடுகளில் வழமைக்கு மாறாக பனிப்பொழிவு காணப்படுகின்றது.

எனினும், பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அண்மைய நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.

இது மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது.

இது ஒருபுறமிருக்க இந்த பனிப்பொழிவு குறித்தும், பனிப்பொழிவினால் ஏற்படவிருக்கும் இழப்புகள் குறித்தும் கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனம் தற்போது மக்களை அச்சத்தின் உச்சத்திற்கே கொண்டு போயுள்ளது என்றே கூறவேண்டும்.

ஆம், இத்தாலிய நோஸ்ராடாமஸ் ஒருவரின் தீர்க்கதரிசனம் தற்போது நனவாகி வருவதாக அச்சத்தை ஏற்படுத்தும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த 1492ஆம் ஆண்டு முதல் 1582ஆம் ஆண்டு வரை வாழ்ந்த இத்தாலிய நோஸ்ராடாமஸ் என்று அறியப்பட்ட Matteo Tafuri என்பவர் உலகம் கடுமையான பனிப்பொழிவினால் அழியும் என 500 ஆண்டுகளுக்கு முன்னரே கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரின் தீர்க்கதரிசனங்கள் பல நனவாகியுள்ளதாக இத்தாலிய மக்கள் நம்புகின்றனர். இந்நிலையில், அவர் மரணிப்பதற்கு முன்னர் உலக அழிவு குறித்து தீர்க்க தரிசனம் ஒன்றை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது, தொடர்ந்து இரண்டு நாட்கள் இத்தாலிய நகரான Salentoவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டால் அது உலக அழிவுக்கான அறிகுறி என தீர்க்கதரிசன் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தெரிவித்த அந்த பனிப்பொழிவு Salentoவில் தொடர்ந்து இரண்டு நாட்களாக ஏற்பட்டுள்ளதாக அச்சமூட்டும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Salento நகரம் எப்போதுமே மிதமான வெட்ப காலநிலைக்கு பெயர்போன நகரமாகும். இங்கு பனிப்பொழிவு என்பது அரிதிலும் அரிதான விடயம் என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

எனினும், அனைவரும் வியக்கும் வகையில் இங்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இது உலக மக்களிடையே பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments