இலங்கை வரும் அகதிகள்...! உதவித் தொகை வழங்க சிறப்பு ஏற்பாடு

Report Print Vino in சிறப்பு
82Shares

தமிழக முகாம்களில் இருந்து, இலங்கைக்கு 40க்கும் மேற்பட்ட அகதிகள் புறப்பட்டு சென்றுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் வசித்து வரும் 40 க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் இலங்கை திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் கோவை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் இருந்த அகதி முகாம்களில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் திருச்சியிலிருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் நாடு திரும்பியதாக தெரியவருகிறது.

இவர்களுக்கான பயணச் செலவுகளை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் (UNHCR) ஏற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் மீள் ஒருங்கிணைப்பு தொகையாக ஒரு நபருக்கு 5000 ரூபாயும், பயணப்படியாக ஒரு நபருக்கு 1200 ரூபாயும், உதவித்தொகையாக ஒரு குடும்பத்திற்கு 5000 ரூபாயும் ஐக்கிய நாடுகள் ஆணையம் சார்பாக வழங்கப்படும் என தெரிவிக்கபடுகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக தமிழகத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் 60,000ற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் அகதிகளாக வசித்து வருகின்றனர். முகாம்களுக்கு வெளியே 30,000 ற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments