தமக்கு சொந்தமான இடங்களை தாரைவார்த்துக்கொடுக்கும் தமிழன்! எதிர்காலம் கேள்விக்குறி

Report Print Gokulan Gokulan in சிறப்பு
159Shares

தமிழர்களுக்கென்று உரிய எத்தனையோ முக்கியமான விடயங்களை, தமிழர் வரலாறு பேசும், எத்தனையோ அதிசயங்களை நாம் பறிகொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

அந்தளவில் இலங்கையிலும் தமிழருக்கான முக்கிய இடங்களை தாரை வார்த்து விட்டு வாழ வழியின்றி நாம் தவித்துக் கொண்டிருக்கின்றோம். ஒரு கணமாவது நாம் பறிகொடுத்த இடங்களை பற்றி சிந்தித்திருக்கின்றோமா?

தைத்திருநாளாம் இந்நாளில் நாம் மீட்டுப்பார்க்க வேண்டிய சில விடயங்கள்.

இலங்கையின் புனித பூமி, என சிறப்பிக்கப்படும் ஓரிடம்தான் கதிர்காமம் புனித தலமான இத்தலம் இலங்கையின் பழம்பெரும் பூமியாக அடையாளப் படுத்தப்படுகின்றது.

குறிப்பாக தமிழர்களால் பாதுகாக்கப்பட்டு வந்த இந்தபூமி இன்று சிங்களவர்களால் பராமறிக்கப்பட்டு வருகின்றது. முன்னின்று பூஜை வழிபாடுகளை நடத்த வேண்டிய நாம் வெறும் பார்வையாளராகவோ, பயணிகளாகவோ தங்கி பார்வையிட்டு வருகின்றோம்.

சிங்கள மரபுகளை தழுவியதாகவே திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. பல இடங்களில் முருகன் சிலைகளை விட புத்தரின் சிலைகளே அதிகம் காணப்படுகின்றன.

புகழ்பெற்ற சூரன் கோட்டையும் விகாரை அமைப்பிலேயே காணப்படுகின்றமை தமிழர்கள் எந்தளவிற்கு ஏமாற்றப்படுகின்றோம் என்பதற்கு உதாரணம்.

இது மட்டுமன்றி இன்னும் சில இடங்களை இதுப்போன்று அடையாளப்படுத்தலாம்.சிகிரியா கோட்டை முகலனுக்கு பயந்து ஒழிந்து திரிந்த காசியப்பன் மன்னனால் உருவாக்கப்பட்டது.

அழகிய பூந்தோட்டங்கள், கட்டடங்கள் பிரமிக்க வைக்கும் முகத்தோற்றம் என எவ்வளவு வியப்பூட்டும் விடயங்கள் காணப்படுகின்றன.

அந்த காலத்திலேயே கணினி தொழிநுட்பத்தை பயன்படுத்தியது போன்று கட்டடங்களை உருவாக்கிய தமிழனின் திறமையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

ஆனால் இன்று ஒரு தமிழனாவது இதில் உரிமை கோரவோ தமிழ் படைப்புகள் என்று அடையாளப்படுத்தவோ முடியுமா?அரசாங்கம் பொறுப்பேற்றிருந்தாலும் பின்னணியில் ஒரு தமிழர் கூட இதில் உள்ளடங்கவில்லை என்பது தான் வியப்புக்குரியது.

இதேபோல் சீதை தீக்குளித்த இடம் இன்று தடயமே இன்றி புத்த சிலைகளால் நிரம்பி வழிகின்றது. இவ்வாறிருக்க அண்மையில் மாணி்க்கமடு பிரதேசம் தட்டிப்பறிக்கப் பட்டமையும் தமிழருக்கான மதிப்பு எத்தகையது என்பதை எடுத்து காட்டுகின்றது.

இந்த நாளில் இதனை மீட்டுத்தருவதன் நோக்கம் இனிவரும் காலங்களிலாவது தமிழரின் பாரம்பரிய பிரதேசங்களை விட்டுக் கொடுக்காதிருப்போம் என்பதற்காகவே ஆகும்.

இவை மட்டுமல்ல இதுப்போன்று எத்தனையோ பிரதேசங்களை தமிழர் நாம் தாரை வார்த்து நிற்கின்றோம், இவ்வாறான இடங்களை தத்துக்கொடுத்துவிட்டு இன்று தமிழன் இடமின்றி தவித்துக்கொண்டிருக்கின்றான். இனியும் இதுப்போன்றதொரு நிலை உருவாகாதிருக்க வழி வகுத்து வைப்போம் ஏனெனில் எதிர்காலமும் எமது கையில்தான்.

Comments