திருமண செலவினை விடுத்து ஏழைகளுக்கு உதவுங்கள்: மைத்திரி

Report Print Vino in சிறப்பு
181Shares

திருமண வைபவங்களுக்கான செலவைக் குறைத்து ஏழைகளுக்கு உதவ முன்வர வேண்டும் என ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற 'அதிகாரபூர்வ பயணம்' எனும் ஜனாதிபதியின் மக்கள் சேவை திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,

திருமண வைபவங்களுக்காக சிலர் செலவிடும் தொகையை பார்க்கும் போது அதிர்ச்சியடைவதாகவும் திருமண வைபவங்களுக்கு குறைந்த அளவில் செலவிட்டு, மிகுதியை ஏழைகளுக்கு வழங்கினால் சிறந்ததாக அமையும்.

அரசாங்கத்தின் அனைத்து சேவைகளையும் கிராமிய மக்களுக்கு வழங்கும் கொள்கை அடிப்படையில் ஜனாதிபதியின் ஆலோலசனையின் படி 'அதிகாரபூர்வ பயணம்' திட்டம் பிரதேச செயலகங்களில் செயற்படுத்தப்படுகின்றன.

மேலும் குறித்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Comments