வல்வெட்டித்துறையில் வெற்றி பெற்ற ராட்சத ஓணான்..!

Report Print Murali Murali in சிறப்பு
864Shares

தைப்பொங்கலை முன்னிட்டு வட மாகாணத்தில் அண்மையில் பட்டப்போட்டி திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது. இது குறித்து செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன.

குறித்த, போட்டி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் உள்ள வல்வை உதயசூரியன் கடற்கரையில் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த போட்டியில் பல்வேறு ராட்சத வடிவங்களிலான பாய்மரப் படகு, மாட்டு வண்டி, இயந்திர மனிதன், ராட்சத ஓணான், நாக பாம்பின் தலை உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட பட்டங்கள் பறக்கவிடப்பட்டன.

இந்நிலையில், குறித்த போட்டியில் 2017ஆம் ஆண்டின் ராட்சத பட்டத்துக்கான பரிசு, சுமார் 40 அடி நீளமான ராட்சத ஓணான் பட்டத்துக்குக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பிறந்த மண்ணை அடையாளப்படுத்தும் விதமாக போர் விமானம், யுத்த டாங்கி போன்ற பட்டங்களும் இதன் போது பறக்கவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments