தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்து அகதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுன்றது.
தமிழகம் இராயனூர் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 வயதான தர்மகுமார் என்ற ஈழத்து அகதியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக அவரது குடும்பத்தில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக அண்மைய நாட்களாக குறித்து நபர் அதிகளவில் மது அருந்திவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக விரக்தியடைந்த தர்மாகுமார், கடந்த 15ஆம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்து தற்கொலை சம்பவம் தொடர்பில் பசுபதிபாளையம் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பு -
இந்த உலகில் நிரந்தரம் என்று எதுவும் இல்லை. மனிதனாக பிறந்த ஒவ்வொரு நபரும் என்றாவது ஒருநாள் மரணிக்கத்தான் போகின்றார்கள்.
ஆனால் அதற்குள் நாம் மரணத்தை தேடி செல்லக்கூடாது. ஒரு உயிரை கொடுப்பது கடவுள். அந்த உயிரை அழிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.
பிரச்சினைகள் இன்றி வாழ்க்கையில் நாம் வெற்றிபெற முடியாது. ஒவ்வொரு பிரச்சினைகளும் நமக்கு ஏதோ ஒரு பாடத்தை கற்றுக்கொடுக்கின்றன.
ஆகவே பிரச்சினைகளை நாம் தைரியமாக முகம் கொடுக்க வேண்டும். அதிலிருந்து தப்பிப்பதற்கு உயிரை மாய்த்துக்கொள்ளும் செயலை ஒருபோதும் செய்யக்கூடாது.