தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை பாசல் பழையமாணவர் சங்கம் , மற்றும் இலக்கியவெளி உறுப்பினர்கள் இணைந்து (14) சனிக்கிழமை காலை 11. 00 மணிக்குக் கொண்டாடியுள்ளனர்.
வானம் பனி பொழிந்து வாழ்த்த மதபேதங்கள் இல்லாது இளையோரால் இவ்விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு கதிரவனுக்குப் பொங்கல் பொங்கிப் படைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இந்நிகழ்வு, தமிழ் மக்களின் பண்பாட்டையும் வாழ்வியலையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்ததுடன் தாய்நாட்டில் கொண்டாடப்பட்ட உணர்வினையும் தோற்றுவித்திருந்தது.
பின்னர் சிறுவர்களின் நிகழ்வுகளோடு நடனங்கள் , வயலின் இசை , கவியரங்கம் , விவாதமேடை என்பனவும் இடம்பெற்று விழா இனிதே நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.